» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இறச்சகுளம் ரூ.90 இலட்சம் மதிப்பில் சாலை பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

வியாழன் 9, ஜனவரி 2025 5:31:05 PM (IST)



இறச்சகுளம் பகுதியில் ரூ.90 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (09.01.2025) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025-ன் கீழ் ரூ.90 இலட்சம் மதிப்பில் இறச்சகுளம் முதல் துவரங்காடு வரை 1.6 கி.மீட்டர் நீளத்திலும், 7 மீட்டர் அகலத்தில் சாலையை விரிவாக்கி, தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, இத்தார்சாலையின் தரத்தினை ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்டறியப்பட்டதோடு, சாலை தரமானதாக இருக்கவும், பணியினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். ஆய்வில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அரவிந்த், சாலை ஆய்வாளர் அருள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors






Thoothukudi Business Directory