» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

வியாழன் 9, ஜனவரி 2025 5:26:38 PM (IST)

மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்காதால் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படவில்லை என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இத்தொகை வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இது தொடர்பாக சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் தான் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 தரப்படவில்லை. புயல் பாதிப்புக்கு ரூ.37 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டோம். ரூ.276 கோடி மட்டுமே தந்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிலுவையில் வைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சக்கரபாணி அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: 2009 ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்தவர் கருணாநிதி. 2017 -18 ல் அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசாக ஒரு ரூபாய் கூட தரவில்லை. 2021 தேர்தலுக்காக பொங்கல் தொகுப்புடன் பரிசாக தந்தது என விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory