» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் : ஆளுநரிடம் விஜய் மனு!
திங்கள் 30, டிசம்பர் 2024 3:58:58 PM (IST)
தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின்பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை "இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் , அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
தமிழ்நாட்டில்Dec 30, 2024 - 04:08:48 PM | Posted IP 162.1*****
தமிழ்நாட்டில் சினிமாவில் நடித்தால் மக்கள் தொண்டன் என்று நினைப்பு. யார் என்ன பேசவேண்டும் என்று விவஸ்தையே இல்லை. ஜெ . இருந்தால் இவர்கள் எல்லாம் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள்.
வேந்தர்Dec 31, 2024 - 10:38:24 AM | Posted IP 162.1*****