» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் நேரடி மோதல்: பாமக பொதுக்குழுவில் பரபரப்பு!

சனி 28, டிசம்பர் 2024 3:34:36 PM (IST)



இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பாமக பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர். ச.ராமதாஸ். கெளரவத் தலைவர். ஜி.கே. மணி வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள்பங்கேற்றுள்ளனர்.

பொதுக்குழு தொடக்கமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் -க்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் வளர்ச்சி, எதிர்கால செயல்பாடுகள் குறித்து ராமதாஸ் பேசினார். பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக ராமதாஸ் மகள் வழிப்பேரன் முகுந்தனை நியமித்தது தொடர்பாக கூட்ட மேடையில் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு யாரும் தேவையில்லை என அன்புமணி கூற, முகுந்தன்தான் பாமக இளைஞரணி தலைவர் என ராமதாஸ் உறுதியாக தெரிவித்ததை அடுத்து மேடையிலேயே மைக்கை தூக்கி எறிந்தார் அன்புமணி. இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து மீண்டும் சொல்கிறேன். நான் உருவாக்கிய வன்னியர் சங்கம், கட்சி. இங்கு நான்தான் முடிவு எடுப்போன். நான் சொல்வதை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் அது யாராக இருந்தாலும் கட்சியில் இருக்க முடியாது, விலகிக்கொள்ளலாம் என மேடையில் அன்புமணியை கடுமையாக எச்சரித்தார் ராமதாஸ்.

இதனைத்தொடர்ந்து பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கிறது. இனி தொண்டர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என அன்புமணி தொண்டர்களிடையே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாள் தந்தை-மகனுக்கிடையே(நிறுவனத் தலைவர்-தலைவர்) நடந்து வந்த பனிப்போர் இன்று பகிரங்கமாக வெடித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் பனிப்போரால் தொண்டர்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது.

மேடையில் இருந்து இறங்கிய அன்புமணியை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு அன்புமணி ராமதாஸ் வாழ்க என கோஷமிட்டனர். அப்போது ராமதாஸ் காரை மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory