» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாசத்துடன் வளர்த்த ஆட்டை தந்தை விற்றதால் 10‍ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை!

சனி 28, டிசம்பர் 2024 8:53:15 AM (IST)

நெல்லை அருகே பாசத்துடன் வளர்த்த ஆட்டை தந்தை விற்றதால் 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

நெல்லை அருகே கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா, கொத்தனார். இவருடைய மனைவி சிவனியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உண்டு. இளைய மகன் உலகநாதன் (15), கங்கைகொண்டான் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது வீட்டில் ஆடு வளர்த்தனர். அந்த ஆட்டின் மீது உலகநாதன் பாசமாக இருந்தான்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக அந்த ஆட்டை தந்தை சுப்பையா விற்பனை செய்தார். இதனால் உலகநாதன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மாட்டேன் என்றும் அடம் பிடித்து வந்துள்ளார். எனவே, உலகநாதனை தாயார் சிவனியம்மாள் கண்டித்தார். ஆட்டுக்காக வருத்தப்பட வேண்டாம், பள்ளிக்கூடத்துக்கு சென்று நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தினார்.

கடந்த 25-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது உலகநாதன் திடீரென்று விஷம் குடித்தான். இதில் வாந்தி எடுத்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து தாயார் சிவனியம்மாளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உலகநாதனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனாலும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உலகநாதன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory