» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கலை நிகழ்ச்சி : அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்!

வெள்ளி 27, டிசம்பர் 2024 12:07:13 PM (IST)



கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரியில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், முன்னிலையில் அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து, முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்: அய்யன் திருவள்ளுவர் சிலையை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தென்குமரி முனையில் நிறுவி 25 ஆண்டுகள் நிறைந்துள்ளது. அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வருகின்ற டிசம்பர் 30, 31, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. விழா சிறப்பாக நடைபெறும் வகையில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் 30ஆம் தேதி மாலை இங்கு வருகை புரிந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டு, அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையினை இணைத்து கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை திறந்து வைத்து, அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார்கள்.

மேலும் நம்முடைய அய்யன் திருவள்ளுவரை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்வுகளான பட்டிமன்றங்கள், கருத்தரங்கள் மற்றம் கலை நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடைபெற உள்ளது. நமது மாவட்ட ஆட்சியர் அதற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். எனவே அனைத்து துறைகளும் இணைந்து இப்பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகிறார்கள். வெள்ளி விழா நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குமரி முனையில் கூடி அய்யன் திருவள்ளுவர் அவர்களின் புகழை பறைசாற்ற உள்ளார்கள். வெள்ளி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.



அதனைத்தொடர்ந்து மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிநவீன மின்னணு வாகன திருவள்ளுவர் கலை பிராச்சார வாகனத்தினை கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து காந்தி நினைவுமண்டபம் வளாகத்தில் சீரமைக்கப்பட்டுள்ள பூங்காவினையும், சுனாமி நினைவு பூங்காவினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாலத்தின் தரைத்தளப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் த.மனோ தங்கராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா (பொது), செந்தில்வேல் முருகன் (நிலம்)> நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, கலை மற்றும் பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ராமதேவி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவராகாநாத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory