» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முடிவெட்ட வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை : சலூன் கடைக்காரர் மீது போச்சோ வழக்குப்பதிவு
சனி 16, நவம்பர் 2024 8:53:32 AM (IST)
நெல்லை அருகே முடிவெட்ட வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சலூன் கடைக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே அரசனார்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (35). முடி திருத்தும் தொழிலாளியான இவர் முனைஞ்சிப்பட்டியில் சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் 4 வயது சிறுமிக்கு முடி வெட்டுவதற்காக தந்தை அழைத்து வந்தார். சிறுமிக்கு முடி வெட்டுமாறு சலூன் கடைக்காரர் கணேசனிடம் கூறி விட்டு தந்தை அருகில் உள்ள கடைக்கு சென்றார்.
சிறுமிக்கு கணேசன் முடி வெட்டினார். அப்போது கடையில் வேறு யாரும் இல்லை. இதனை பயன்படுத்தி கொண்ட கணேசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அழுதவாறு இருந்தாள். பின்னர் கடைக்கு வந்த தந்தை, முடி வெட்டியதால்தான் சிறுமி அழுகிறாள் என்று கருதி வீட்டுக்கு அழைத்து சென்றார். வீட்டிலும் அழுதவாறு இருந்த சிறுமியிடம் தாயார் விசாரித்தார்.
அப்போது சிறுமிக்கு சலூன் கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
NAAN THAANNov 21, 2024 - 11:06:33 AM | Posted IP 162.1*****