» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலபிரஜாபதி அடிகளாரின் துணைவியாா் மறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு அஞ்சலி

செவ்வாய் 3, டிசம்பர் 2024 5:28:13 PM (IST)



சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளாரின் மனைவி ரமணிபாய் அய்யா மறைவைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி செலுத்தினார். 

சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி அறங்காவலர் பாலபிரஜாதிபதி அடிகளார் அவர்களின் மனைவி ரமணிபாய் அய்யா வைகுண்டர் பதம் அடைந்தார்கள். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் த.மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேலன் டேவிட்சன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், தாமரை பாரதி, இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி இராமகிருஷ்ணன், பாபு, அகஸ்டிசன், ஆனந்த், கேட்சன், பூதலிங்கம், மரிய சிசுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சாமித்தோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப் பதி அறங்காவலா் பாலபிரஜாபதி அடிகளாரின் துணைவியாா் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் வெளியிட்ட இரங்கல் செய்தி: சாமித்தோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப் பதி அறங்காவலா் பாலபிரஜாபதியின் துணைவியாா் ரமணிபாய் மறைந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். துணையை இழந்து வாடும் பாலபிரஜாபதிக்கு தொலைபேசி வாயிலாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory