» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவி அந்தரங்க படத்தை பரவவிட்ட தந்தை - மகன் கைது

புதன் 13, நவம்பர் 2024 8:30:29 AM (IST)

இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவியின் அந்தரங்க படத்தை பரவவிட்ட தந்தை - மகனை போலீசார் கைது செய்தனர். 

மும்பையை சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி ஒருவர், விடுமுறை நாட்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில், அந்த கல்லூரி மாணவி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சுஜித் (27) என்பவர், தனது அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் அனுப்பி வைத்த பிறகும் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கேட்டு அவரது தந்தையும் சேர்ந்து மிரட்டியதாகவும், பணம் இல்லை என்று கூறியதால், தனது அந்தரங்க புகைப்படத்தை சுஜித் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து, வளசரவாக்கம் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், கல்லூரி மாணவி கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மேக்குவளைவிடுவை சேர்ந்த சுஜித் என்பவரையும், அவரது தந்தை வின்சென்ட் (55) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், சுஜித் பிளஸ்-2 படித்தவர் என்பதும், முதலில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாகவும், பிறகு மாவுக்கடை ஒன்றில் வேலையும் பார்த்துள்ளார். அவரது தந்தை வின்சென்ட் கூலித் தொழிலாளி ஆவார். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory