» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: முன் ஜாமீன் கோரி கஸ்தூரி மனு தாக்கல்!

திங்கள் 11, நவம்பர் 2024 12:51:17 PM (IST)

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தனிப் படை போலீசார் தேடி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. இதையடுத்து, தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கோரினார். எனினும் மதுரை, ஆண்டிபட்டி போன்ற பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதேபோல், அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது அளித்த புகாரின் அடிப்படையில், கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைக்கு வரும்படி, சம்மன் வழங்கச் சென்றபோது கஸ்தூரியின் வீடு பூட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கஸ்தூரியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கஸ்தூரியை தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக தேடி வரும் நிலையில், அவர் ஐதராபாத்திற்கு அவ்வப்போது சென்று வந்ததால் அங்கு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். உள்நோக்கத்தோடு தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கஸ்தூரி தனது முன் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory