» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாம்பவர்வடகரை அரசு பள்ளி மாணவர்கள் தொல்லியல் களப்பயணம்!

ஞாயிறு 10, நவம்பர் 2024 7:45:38 PM (IST)



ஆதிச்சநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் தொல்லியல் களப்பயணம் மேற்கொண்டனர்.

சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் பா.பிரபாவதி அனுமதியோடு 62 மாணவ/மாணவியர்கள் 6 ஆசிரியர்கள் நேற்று தொல்லியல் களப்பயணம் சென்றனர். கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்ட வெங்கடாசலபதி கோவில் கலை சிற்பங்களையும், கல் தூண், பழங்கால எழுத்து வடிவங்களையும் கண்டுகளித்தனர். 

தமிழரின் தொன்மை நாகரிகத்தை அறியும் பொருட்டு ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடைபெற்ற இடங்களையும், முதுமக்கள் தாழிகள், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டானர். அகழாய்வு பொறுப்பாளர் வெங்கடேஷ் அவர்கள் ஆதிச்சநல்லூர் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் மண்டை ஓடுகள், இரும்பு, பொருட்கள், தானியங்கள், நெல் மணிகள், தங்கம் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது என்று மாணவ/ மாணவவியர்களுக்கு சிறப்பாக விளக்கினார். 

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் ஆய்வகம், 3D படக்காட்சி, மற்றும் அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டினார்கள். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நடராஜன், அனிதா, சத்யா, மகேஷ்வரி, சண்முக ஜெகம், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொல்லியல் களப்பயணம் அனைத்து நிகழ்வுகளையும் தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் சி. நடராஜன் ஏற்பாடு செய்ததார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory