» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

புதன் 6, நவம்பர் 2024 4:25:27 PM (IST)



மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசன பிசான பருவ சாகுபடிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இன்று தண்ணீர் திறந்து வைத்து, மலர் தூவினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு இன்று (11.06.2024) முதல் 31.03.2025 வரை 146 நாட்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 35 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

இதன் மூலம், அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பாசன பரப்பு பயன்பெறும். எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் விநியோக பணியில் நீர்வளத்துறைக்கு விவசாய பெருமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பரணிசேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர் முருகன், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் அந்தோணி அம்மாள், வட்டாட்சியர் நவாஸ், உதவி பொறியாளர்கள் ராம்சூரியா, தினேஷ்குமார், உட்பட அரசு அலுவலர்கள் மற்றம் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory