» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் : தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்பு

திங்கள் 4, நவம்பர் 2024 3:47:56 PM (IST)

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்.  மாநில பொதுச் செயலாளர் எம் யுவராஜா வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். 1972 க்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சமயங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்பு பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற்றது. 

அதனால் குழப்பங்கள் இன்றி நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்றது. இதனால் அரசுக்கு செலவு குறைந்தது. ஆனால் 1967க்கு பிறகு பாராளுமன்றத்திற்கு தனியாகவும் சட்டமன்றங்களுக்கு தனியாகவும் உள்ளாட்சிகளுக்கு தனியாகவும் தேர்தல் நடைபெறுகிறது. இதை தவிர இடைத்தேர்தல் பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் நடைபெறுகிறது.

ஏறக்குறைய ஒரு ஐந்து ஆண்டு காலத்தில் ஒரு மாநிலத்தில் மூன்று அல்லது நான்கு முறை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. உதாரணத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறைந்தபட்சம் மூன்று மாதத்தில் இருந்து ஐந்து மாதங்கள் வரை நடைமுறையில் இருக்கிறது. இடைத்தேர்தல் நடைபெறும் போது அந்த மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கப்படுகின்றன. 

பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அரசை அணுகி பெரும் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது. அரசு இயந்திரம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடுவது பொதுமக்கள் பட்டா, ஜாதி சான்றிதழ் முதியோர் உதவித்தொகை உடல் ஊனமுற்றோர் நிவாரணம் சாலை வசதி குடிநீர் வசதி சிறப்பு மருத்துவ முகாம்கள் அரசு நலத்திட்டங்கள் போன்றவற்றை பெறுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. 

அது மட்டுமல்லாமல் தேர்தல் நடத்த விதிமுறைகள் இருப்பதால் பணம் பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்படுகிறது இதனால் வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவர் ஒரு மருத்துவமனைக்கு செல்லும்போது கூட பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது திருமணங்களுக்கு வழங்க எடுத்துச் செல்லும் பரிசு பொருட்கள் பறிக்கப்படுகிறது. இதனால் எண்ணற்ற துயர் மக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் ஒவ்வொரு முறை தேர்தல் நடத்துவதால் கோடிக்கணக்கான ரூபாய் தேர்தலுக்காக செலவிடப்படுகிறது.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தினால் தேர்தல் செலவு  குறையும். இதை ஏற்கனவே சுதர்சனநாச்சியப்பன் நிதி ஆயோக் சட்ட ஆணையம் கமிட்டிகள் தெளிவுபடுத்தி உள்ளன தற்பொழுது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையும் இதை எதிரொலிக்கிறது சுமார் 48 ஆயிரம் பேர் கருத்து  கூறினர் அதில் 80 சதவீதம் பேர் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவதை ஆதரித்துள்ளனர்.

சுமார் 45க்கும் மேற்பட்ட கட்சிகள் கருத்து கூறியதில் 37க்கும் மேற்பட்டவை ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்கின்றன ஒரு சில கட்சிகள் தான் தங்கள் சுயநலத்திற்காக இக் கொள்கையை எதிர்க்கின்றன. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதால் இந்தியாவின் இறையாண்மை வலுப்பெறும். நாட்டின் ஒற்றுமை உணர்வு மேம்படும். 

நிர்வாக சிக்கலின்றி ஐந்தாண்டுகளுக்கு நாட்டில் அமைதியான நடைமுறை இருக்கும் அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏராளமான நிதியை செலவிடுவது குறையும். இது ஊழலை மட்டுப்படுத்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி சுமார் மூன்றில் இருந்து ஐந்து மாதங்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் மாநிலங்கள் தொகுதிகள் நாடு இருப்பது குறையும். 

பொதுவாக சில கட்சிகள் பயப்படுவது போல பாராளுமன்றத்திற்கு சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தால் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் கட்சிக்கு ஆதரவாகவே சட்டமன்றத்திற்கும் வாக்களிப்பார்கள் என்பதில் உண்மை இல்லை. உதாரணத்துக்கு தமிழகத்தை பொறுத்தவரை பாராளுமன்றத்திற்கு ஒரு மாதிரியாகவும் சட்டமன்றத்துக்கு ஒரு மாதிரியாகவும் எப்பொழுதும் வாக்களிக்கின்றனர். இது எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது நடந்தது.  இதுபோல பல மாநிலங்களில் மக்கள் பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்திற்கும் வாக்களிக்கின்றனர்.

அதேபோன்று ஒரு ஆட்சிக்கு கவிழ்ந்தால் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ராம்நாத் கோவிந்த் கமிட்டி தெளிவாக வரையறுத்துள்ளது. என்ன செய்வது என்று அச்சப்படத் தேவையில்லை. இதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யும் நிலை பொம்மை வழக்குக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு நிபந்தனைக்கு உட்பட்டு உள்ளது. 

எனவே எளிதில் ஒரு ஆட்சியை மத்திய அரசு நீக்க முடியாது. உள்ளாட்சிகளுக்கும் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் நடத்திய 100 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் பல மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல் மாநில அரசு விருப்பப்படி நடக்கிறது திட்டமிட்டபடி அவைகள் நடந்தால் உள்ளாட்சிகளில் உரிய பிரதிநிதித்துவம் நிர்வாகம்  தொடரும். ஒரு வளர்ந்த நாடாக இந்தியா மாற தேர்தல் சீர்திருத்தம் அவசியமாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

KANNANNov 4, 2024 - 06:49:00 PM | Posted IP 162.1*****

KANDUPUDICHTEENGALE, VERY GOOD.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory