» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 4 தேர்வு முடிவுகள் இரண்டு நாட்களில் வெளியாகும் : டி.என்.பி.எஸ்.சி. தகவல்!

திங்கள் 28, அக்டோபர் 2024 11:31:47 AM (IST)

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுககள் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9-ம் தேதி நடத்தியது.

இதில் பங்கேற்க 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்த்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில், இன்னும் 2 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. தேர்வு முடிந்த 3 மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory