» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி நிறுத்தம்? ஆவின் நிறுவனம் விளக்கம்!

வெள்ளி 18, அக்டோபர் 2024 5:13:00 PM (IST)

பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை,'' என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.

தமிழகத்தில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் பச்சை பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில், கூடுதல் விலையில் திருச்சி மண்டலத்தில் ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

இதனையடுத்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆவின் நிறுவனம் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. 

மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துகளை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலின் விற்பனையையும் இதுவரை ஆவின் துவங்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory