» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்: வெள்ள மீட்பு பணிகளை முதல்வர் ஆய்வு!
செவ்வாய் 15, அக்டோபர் 2024 3:34:14 PM (IST)
சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். கொளத்தூர் பகுதிக்குட்பட்ட யானைகவுனி பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை நீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து டீக்கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர் துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
கோமாளிOct 15, 2024 - 06:44:32 PM | Posted IP 172.7*****