» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்: டி.டி.வி.தினகரன்
செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:32:57 AM (IST)
தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் அவர் அளித் பேட்டி : தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொலை போன்றவை அதிகமாவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கம்தான் காரணம். இதையெல்லாம் இந்த அரசு கட்டுப்படுத்தத் தவறியதால், பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமானால் ஜெயலலிதாவின் (அ.தி.மு.க.) தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை இருப்பதாகக்கூறி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். அ.ம.மு.க. மக்களின் ஆதரவுடனும், கூட்டணி பலத்துடனும் தி.மு.க.வை வீழ்த்தும். தி.மு.க.வுக்கு உதவியாக பி டீமாக இருக்கிற பழனிசாமியையும் வீழ்த்துகிற காலம் 2026-ம் ஆண்டில் வரும். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என கூறுவதால் அவரை அச்சப்படுத்தும் விதமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.