» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசின் அனுமதி பெறாத விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை!

வியாழன் 3, அக்டோபர் 2024 11:25:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்படும் பெண்கள்/குழந்தைகள் தங்கும் விடுதிகள் / இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனாஎச்சரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்படும் பெண்கள் தங்கும் விடுதிகள்/ இல்லங்கள்/உறைவிடங்கள், கல்லூரி மாணவியர் விடுதிகள், பெண்கள் தங்கும் விடுதி, குழந்தைகள் இல்லங்கள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஜவுளிக்கடைகள் உள்ள மகளிர் விடுதிகள் அனைத்தும் உடனடியாக அரசிடம் பதிவு மேற்கொள்ள விண்ணப்பிக்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,   தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள்/சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள்/கல்லூரிகள்/பயிற்சி நிறுவனங்கள்/தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள்/ தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனிநபர்களால் நடத்தப்பட்டு வரும் கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் அனைத்தும் The Tamil Nadu Hostels and Homes for Women and Children (Regulation) Act 2014 –ன் கீழ் 10 நாட்களுக்குள் கண்டிப்பாக பதிவு மேற்கொள்ள வேண்டும். 

பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு மேற்கொள்ள தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு The Tamil Nadu Hostels and Homes for Women and Children (Regulation) Act 2014- சட்டத்தின் படி 2 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

பதிவு செய்யப்படாத விடுதிகள்/ இல்லங்கள் பதிவு உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு பலமுறை பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் /2 ஆண்டுகள் வரை சிறை தண்டமை விதிப்பதுடன் நிறுவனத்தின் உரிமம்  ரத்து செய்யப்படும்.

பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இணைப்பு கட்டிடம் தரைத்தளத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்: 04652-278404) தொடர்பு கொள்ளலாம். மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory