» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை தமிழ்நாடு அரசே நடத்த கோரிக்கை!

புதன் 2, அக்டோபர் 2024 4:13:22 PM (IST)



நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும் என மறுகால்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

அண்ணல் காந்தியடிகளின் 156வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், மறுகால்குறிச்சி ஊராட்சியில் இன்று (02.10.2024) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

அப்பகுதி பொதுமக்கள் நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும். இம்மண்டலத்தில் அதிகமாக தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து வேலை வாய்ப்பில் இப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு முன்னூரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அண்ணல் காந்தியடிகளின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு திருநேல்வேலி மாவட்டத்திலுள்ள 204 அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது, இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராம ஊரட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்து பொதுமக்கள் மத்தியில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. கிராம ஊராட்சியில் பல்வேறு நிதிக்குழு மானியத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட பணிகளின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

சாலை வசதி, குடிநீர் வசதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், கிராம தண்ணிரைவு திட்டம், அனைத்து பொது இடங்களையும் சுத்தம் செய்தல் மற்றும் பொது இடங்களை அசுத்தம் செய்யாதிருத்தல் குறித்தும், கழிப்பறை பயன்பாடு, குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்தல், திடக்கழிவு மேலாண்மை குறித்தும், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருட்களை தவிர்க்கவும், அவற்றிற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்களிடம் இத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தூய்மையான மற்றும் பசுமையான கிராமத்;தை உருவாக்குதல் குறித்து, ஒருமுறை பயன்படுதப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் பேசுகையில்: தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் தின விழாவினை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

இக்கிராமத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து கிராமசபை கூடத்தில் விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. பெண் குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக வேலைகளை ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிராக அனைத்து பகுதியிலும்; விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு மழை வெள்ளத்தினால் கிராமங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அடிப்படையான வசதிகள் அனைத்தும் கிடைத்து கிராமங்கள் தன்னிரைவு அடைய வேண்டும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அது நிறைவுற்றதும் இந்த ஊராட்சிக்கு தேவைக்கு அதிகமான குடிநீர் கிடைக்கும்.

கிராமங்களில் அடிப்படை தேவையான திட்டங்களை கிராம சபை மூலம் தீர்மானங்கள் கொண்டு வந்து கிராம தேவைகளை பூர்த்தி செய்யலாம். கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்து கிராமங்களுக்கு தேவையான பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும். நிதிகளை முறையாக பயன்படுத்தினால் தான் அடுத்த திட்டத்திற்கு நிதி ஓதுக்கப்படும்.

கிராமங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துகொள்வது நம் அனைவரின் கடமை. ஒரு நாட்டின் அடிப்படை முன்னேற்றமே கிராமத்தின் இருந்து தான் வருகிறது. எனவே கிராம மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதலின் படி சுகாதாரத்தை முழுமையாக கையாண்டு இந்த நாட்டிற்கு முன்னோடியாக திகழ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்தார்.

பின்னர், அண்ணல் காந்தியடிகளின் 156வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், மறுகால்குறிச்சி ஊராட்சியில் இன்று (02.10.2024) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், கலந்து கொண்டு மறுகால்குறிச்சி ஊராட்சி மன்றத்திற்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மறுகால் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள்.

இக்கிராம சபைக் கூட்டத்தில், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் திரு, இலக்குவன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் அனிதா, தோட்டக்கலைதுறை இயக்குநர் இளங்கோ, நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஸேவரன், யமுணா, மாவட்ட சுகதார அலுவலர் மரு.கீதாராணி, நாங்குநேரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமாரி, துணைத்தலைவர் புஷ்ப பாண்டி, முக்கிய பிரமுகர் சுடலைகண்ணு மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory