» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் : பிரதமர் மோடிக்கு முதல்வர் அறிவுறுத்தல்!
புதன் 24, ஜூலை 2024 4:17:29 PM (IST)
தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். பிரதமர் மோடி அவர்களே ,
"தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்" என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.