» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு: நவ.7-க்கு ஒத்திவைப்பு

செவ்வாய் 29, அக்டோபர் 2024 5:08:24 PM (IST)

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நவ.7-க்கு ஒத்திவைத்தது. 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர், டிரைவர், தொழில்நுட்ப பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

இதுபோன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 வழக்குகளில் ஒரு வழக்கில் 14 பேரும், இன்னொரு வழக்கில் 23 பேரும், மற்றொரு வழக்கில் 2 ஆயிரத்து 202 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த 3 வழக்குகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். 

இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தடயவியல்துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கை நவ.7-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory