» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின் கட்டண உயர்வை கண்டித்து 21-ம் தேதி ஆர்ப்பாட்டம்: சீமான் அறிவிப்பு
வியாழன் 18, ஜூலை 2024 5:52:29 PM (IST)
மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய மின் கட்டணம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். வரும் 21-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.