» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை இல்லை : டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
புதன் 17, ஜூலை 2024 4:10:57 PM (IST)
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய, உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக வெளியான தகவலுக்கு பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமில்லை. இதுபோன்ற எந்த புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் இறங்கத் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.