» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மூளையை தாக்கும் அமீபா பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஞாயிறு 14, ஜூலை 2024 9:17:09 AM (IST)

தமிழகத்தில் மூளையை தாக்கும் அமீபா பாதிப்பு தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அரசு கல்லூரி நர்சிங் மாணவர்கள் சார்பில் செம்மொழி பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகம் வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் மக்கள் தொகை தினம் முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் சில்பா பிரபாகர் சதிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் நர்சிங் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர், மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: 38-வது உலக மக்கள் தொகை தினம் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் ஆயிரம் மக்கள் தொகைக்கு 13.8 விகிதமும், இந்தியாவினைப் பொறுத்தவரை 19.50 விகிதமும் ஆகும். சிசு மரண விகிதம் ஆயிரம் குழந்தை பிறப்பிற்கு தமிழ்நாட்டில் 13 விகிதமும், இந்தியாவில் 28 விகிதமும் உள்ளது. மகப்பேறு மரணம் பொறுத்தவரை ஒரு லட்சம் குழந்தை பிறப்பிற்கு இந்தியாவில் 97 விகிதமும், தமிழ்நாட்டில் 45.6 விகிதமும் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள சான் அன்டோனியா நகரத்தில் நடைபெற்ற பெட்னா 37-வது தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினேன். ஹார்வார்டு பல்கலைக்கழகம், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உலக வங்கியுடன் 100 சதவீதம் நிதி உதவி பெற்று தமிழ்நாட்டு மருத்தவ கட்டமைப்புகளை அடுத்த கட்டத்திற்கு நோக்கி செல்லும் வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரையில் 5 ஆயிரத்து 554 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதம் மட்டும் 776 பேர் டெங்கு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். டெங்கு பாதிப்பு இப்போது கட்டுக்குள் உள்ளது. தேவையற்ற இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மூளையை தாக்கும் அமீபா பாதிப்பு தற்போது வரை எதுவும் ஏற்படவில்லை. கருணாநிதி பற்றி சீமான் பேசிய ஆடியோ, வீடியோ என்னிடம் உள்ளது. அது அவரிடம் போட்டுகாட்டி யார்? துரோகம் செய்தது என தெளிவுபடுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory