» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பங்காரு அடிகளாரின் பேரன்!
ஞாயிறு 14, ஜூலை 2024 8:13:20 AM (IST)
அண்மையில் திருமணம் ஆன ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் பேரன் வழக்கறிஞர் அ.ஆ.அகத்தியன்- டாக்டர். ஷாலினி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை மேல் மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மகன் சக்தி.கோ.ப. அன்பழகன்-ஆஷா அன்பழகன் ஆகியோரின் மகன் அண்மையில் திருமணம் ஆன வழக்கறிஞர் அ.ஆ.அகத்தியன்- டாக்டர். ஷாலினி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, இருவீட்டாரின் உறவினர்களும் கலந்து கொண்டனர். முதல்வரின் துணைவியார் துர்க்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.