» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தோவாளையில் அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

சனி 13, ஜூலை 2024 5:49:33 PM (IST)



தோவாளையில்  8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைப்பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சானலில் தண்ணீர் திறந்து விட முடியாததால் 8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட அதிமுக  சார்பில் தோவாளை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன் புதூர் விக்னேஸ்வரா மஹால் அருகில் வைத்து மாவட்ட செயலாளரும், குமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் மாபெரும் கஞ்சி காய்ச்சும் போராட்டமானது நடைப்பெற்றது. 

இதில் தோவாளை தெற்கு ஒன்றிய மாவட்ட கழக செயலாளர். முத்துக்குமார் முன்னிலை வைத்தார், மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory