» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புயல், வெள்ளத்தை தமிழக அரசு திறம்பட கையாண்டது: சபாநாயகர் அப்பாவு உரை

திங்கள் 12, பிப்ரவரி 2024 4:40:25 PM (IST)



மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்பை தமிழக அரசு திறம்பட கையாண்டதாக ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என். ரவியின் உரையுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், தமிழ்நாடு ஆளுநரின் கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு ஆளுநர் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்தார்.ஆளுநருக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் "வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய்பாரத்” எனக் குறிப்பிட்டு 2 நிமிடங்களில் உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். அதில், "மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை தமிழக அரசு திறம்பட கையாண்டது.

புயலால் பாதிக்கப்பட்ட 24.02 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வழங்கப்பட்டது. 1.15 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக்காட்டியது பெருமை அளிக்கிறது. உலக முதலீட்டார் மாநாடு சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory