» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீடு புகுந்து தாய், மகளிடம் நகை பறிப்பு: கத்திமுனையில் மர்ம நபர் கைவரிசை

சனி 3, ஜூன் 2023 4:24:18 PM (IST)

பளுகல் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்திமுனையில் தாய், மகளிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

குமரி மாவட்டம், பளுகல் அருகே மேல்பாலையை அடுத்த மாங்காலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி. இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி அஜிதா (42). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று இரவு அஜிதாவும், அவரது மகளும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்  வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த பீரோவில் இருந்த 2 பவுன் நகையை திருடியுள்ளார். 

பின்னர் அவர் பின்னர் படுக்கையறைக்குள் புகுந்த நபர் அஜிதா மற்றும் அவரது மகளை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்த நகையை பறித்துள்ளார். சுமார் 3 பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அஜிதா அளித்த புகாரின் பேரில், பளுகல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory