» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்த ஆட்சியர் அலுவலகம்!
புதன் 31, மே 2023 10:51:27 AM (IST)
நரம்பியல் தொடர்பான நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் ஆரஞ்சு நிற வண்ண விளக்குகளால் ஒளியேற்றப்பட்டுள்ளது.
Multiple Sclerosis- என்பது மத்திய நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு நோயாகும். இளம் வயதினரை முடக்கும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு நேற்று Multiple Sclerosis Day கடைபிடிக்க அதனுடன் தொடர்புடைய நிறமான ஆரஞ்சு நிறத்தில் அரசு கட்டிடங்களை ஒளிரச் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, Multiple Sclerosis நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் ஆரஞ்சு நிற வண்ண விளக்குகளால் ஒளிர செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.