» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் புதுமைப் பெண் திட்டத்தில் 2ம் கட்டமாக 1590 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
புதன் 8, பிப்ரவரி 2023 3:53:04 PM (IST)
நெல்லையில் புதுமைப் பெண் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 1590 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை ஆணைகளை சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்.
சமூக நலன் மற்றம் மகளிர் உரிமைத்துறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் ‘புதுமைப்பெண்” திட்டம் சார்பில் இரண்டாம் கட்டமாக 1590 மாணவிகளுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வங்கி பதிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தினை 05.09.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக திருவள்ளுவர் மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலையில் சமூக நலன் மற்றம் மகளிர் உரிமைத்துறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் ‘புதுமைப்பெண்” திட்டம் சார்பில் இரண்டாம் கட்டமாக 1590 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதாரரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின் படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்திஅனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளை அதிகரித்தல். பெண்களின் சமூகமற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் புதுமைப்பெண் திட்டத்தின் நோக்கமாகும். புதுமைப்பெண் திட்டத்தினை முதற்கட்டமாக 05.09.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக திருவள்ளுவர் மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 1821 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தற்பொழுது இரண்டாம் கட்டமாக பொறியியல் பயிலும் 158 மாணவிகள், மருத்துவம் பயிலும் 103 மாணவிகள், சட்டம் பயிலும் 3 மாணவிகள், கலை மற்றும் அறிவியல் பயிலும் 1195 மாணவிகள் மற்றும் தொழிற்கல்வி பயிலும் 61 மாணவிகள் என மொத்தம் 1590 மாணவிகள் இத்திட்டதின் கீழ் பயன்பெற உள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினைஅதிகரிக்கும் பொருட்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும்,சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றிகல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிறகல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம்.
2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலைபட்டப்படிப்புபயிலும் மாணவியர்களும், தொழிற் கல்வியைப் பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்த மட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள் கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண்.14417என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம். இத்திட்டத்திற்கு இணையதளம் hவவிள://pநமெயடஎi.வn.பழஎ.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம், மாணவிகள் நலனில் அக்கரைக் கொண்டு கொண்டுவரப்பெற்றுள்ள இத்திட்டத்தின் மூலம் உயர் கல்வி பெற்ற சமூகத்தில் உயர்ந்து இடத்தை அனைவரையும் அடைய வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் சு.கோகுல் , மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தேசிய தகவல் தொழில் நுட்ப அலுவலர் ஆறுமுக நயினார், முதன்மை கல்வி அலுவலர் வெ.திருப்பதி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் தனலெட்சுமி, சாராள் தக்கர் கல்லூரி முதல்வர் உஷா காட்வின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.