» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் 6% மின்கட்டணம் உயர்வு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்அனுமதி

சனி 10, செப்டம்பர் 2022 5:00:53 PM (IST)

தமிழகத்தில் மின் கட்டணத்தை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்திக்கொள்ள மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது. மின் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். 2 மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.275-ம், மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.395-ம், 900 யூனிட்டுகள் வரை நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.565-ம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆண்டுதோறும் 6% மின்கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி மின் கட்டணத்தை 6% உயர்த்திக் கொள்ள தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

KANNANSep 11, 2022 - 01:41:07 PM | Posted IP 162.1*****

SOMEBODY SAYS "FREE..FREE... THAT'S SWEET PIOSON";IT'S TRUE.

goodSep 11, 2022 - 11:48:46 AM | Posted IP 162.1*****

appothan aanda parambarai ellam olunga velaiku poi sambathikkum

KANNANSep 11, 2022 - 11:23:06 AM | Posted IP 162.1*****

50 AANDUKAALA UYARVUKALAIPOLA PALAHIKKOLVAARGAL...THANIYAAR OOLIYARGALIN NILAMAI..?? KANNEER VARUKIRADHU.

ஆம்Sep 11, 2022 - 10:36:49 AM | Posted IP 162.1*****

திராவிட ஆட்சியில் 100 யூனிட் இலவச மின்சாரம் தான் காரணம்

kodumaiSep 10, 2022 - 06:29:02 PM | Posted IP 162.1*****

kodumai...kodumai...makkal nilamai migavum parithabam.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory