» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!!

சனி 10, செப்டம்பர் 2022 3:38:42 PM (IST)



உடல் நலம் தேறி வரும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை அவரது இல்லத்திற்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். 

திரைப்பட இயக்குநா் பாரதிராஜா (81). வயது முதிா்வு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  வயது முதிா்வின் காரணமாகத்தான், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாகவும் ஆனால் வீடு திரும்பினாலும், தொடா்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாரதிராஜாவின் உடல்நிலை சீராகவும், ஆரோக்கியமாகவும் உள்ளதாகவும் அவரது மகன் மனோஜும் கூறியுள்ளார்.  இந்நிலையில், பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பாரதிராஜாவிடம் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். 


மக்கள் கருத்து

bharathirajaSep 11, 2022 - 06:17:12 PM | Posted IP 162.1*****

is a criminal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory