» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 1 தேர்வு நவம்பர் 19ம் தேதிக்கு மாற்றம் : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

சனி 10, செப்டம்பர் 2022 10:19:46 AM (IST)

நிர்வாகக் காரணங்களுக்காக குரூப் 1 தேர்வு அக்டோபர் 30 தேதிக்கு பதில் நவம்பர் 19ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குரூப்-1 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30ந் தேதிக்கு பதில் நவம்பர் 19ந் தேதி தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory