» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழநாட்டுக்கே தேவை: தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தல்

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 12:18:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக தமிழ்நாட்டிற்கே ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண் இயக்குனர் ராஜேஷ் லக்கானி மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கொரோனா தொற்று காலத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் மின்சார தேவை கடுமையாக உயர்ந்துள்ளதாக கடிதத்தில் அவர் கூறியுள்ளார். மாநிலத்தின் தற்போதைய தேவை 17,000 மெகாவாட் மின்சாரம் என்றும், 2025-26ம் ஆண்டு கால கட்டத்தில் மின் தேவை 21,000 மெகாவாட்டாக உயரும் என்றும் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.

2025 மே மாதத்தில் 3வது அலகிலும், அதனை தொடர்ந்து 2025 டிசம்பரில் 4வது அலகிலும் மின் உற்பத்தி தொடங்க உள்ளதால் அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் சொந்த மாநிலம் என்ற வகையில் தமிழ்நாட்டின் பயன்பாட்டுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது பிரிவுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்த போதும் 55% மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்படுவதை கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதாவது கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகா வாட் மின்சாரத்தில் 1150 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இது குறித்து 2019ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதையும் உரிய நேரத்தில் 3 மற்றும் 4ம் பிரிவுகளில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைக்கு முழுமையாக ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளதை ராஜேஷ் லக்கானி சுட்டிக் காட்டி வலியுறுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory