» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் நடத்தை விதிகள்: துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு

புதன் 15, செப்டம்பர் 2021 10:55:03 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில்  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், படைக்கலங்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை படைக்கலங்கள் எடுத்துச் செல்வதற்கு தடையாணை அமலுக்கு வந்துள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரர்களும் தங்களது துப்பாக்கியினை 21.09.2021 தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படை செய்து உரிய ஓப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.  தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர் தமது பொறுப்பில் திரும்ப பெற்றுக்கொள்ளும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory