» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

கோவில்பட்டி பங்களாதெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய இரும்பு வாயிற்கதவு திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களாதெரு நகராட்சி தொடக்கப் பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளியின் முகப்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் புதிய இரும்பு வாயிற்கதவு அமைக்கப்பட்டது. விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார்.
மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் எம்.எஸ்.எஸ்.வி. பாபு முன்னிலை வகிக்க, ரோட்டரி சங்கச் செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட கிளப் சர்வீஸ் சேர்மன் விநாயகாரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய வாயிற்கதவினைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், ராஜ்குமார், தாமோதர கண்ணன், மாரியப்பன், நடராஜன், சரவணன், மணிகண்டன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் பள்ளித் தலைமை ஆசிரியை ராஜசரஸ்வதி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)








