» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

Murdergundas.jpg

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் இன்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (30) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான பாரதி நகரைச் சேர்ந்தவர்களான செல்லபாண்டி மகன் மகாராஜன் (35) மற்றும் முத்து மகன் முத்துராஜ்  (25) ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்து திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory