» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)
தூத்துக்குடியில் சுமைதூக்கும் தொழிலாளி திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகரைச் சேர்ந்த தேவேந்திரனின் மகன் முத்துராஜா (28). சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவருக்குக் காது கேளாத மனைவி மற்றும் 3 வயதில் ஒரு மகன் உள்ளனர். முத்துராஜா அவ்வப்போது மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முத்துராஜா வீட்டிலேயே இருந்துள்ளார். இரவு 7.30 மணியளவில், முத்துராஜாவும் அவரது மனைவியும் சேர்ந்து தங்களின் 3 வயது மகனை அருகிலேயே தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் முத்துராஜாவின் தாயார் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர்.
அதன்பின்னர் சிறிது நேரத்தில், முத்துராஜாவின் மனைவி பதற்றத்துடன் வந்து அத்தையை அழைத்துள்ளார். சந்தேகமடைந்த தாயார் மற்றும் உறவினர்கள் உடனடியாக முத்துராஜாவின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, முத்துராஜா வீட்டின் வேஷ்டியால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் கிடப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் நடவடிக்கை:
சம்பவ இடத்திற்குச் சென்ற சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காமராஜன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். முத்துராஜாவின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துச் சிப்காட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)








