» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

NeithalKalaituty.jpg

தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விழாவை வெற்றி பெறச் செய்த பொதுமக்கள், காவல்துறையினர், அரசுத் துறையினர் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி" என்று கனிமொழி எம்.பி. கூறினார். 

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய 5-வது 'நெய்தல்' கலைத் திருவிழா நேற்றிரவு (ஆகஸ்ட் 16) கோலாகலமாக நிறைவுற்றது.திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த விழாவில், கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுத் தொகைகளும், வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு, நபார்டு வங்கி அதிகாரிகள் சுரேஷ் ராமலிங்கம், சதாம் உசேன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருணாநிதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்கக் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருந்த நாட்டுப்புறக் கலைஞர் பிரசாந்த் சனிக்கிழமை உடல்நலக்குறைவால் மறைந்ததை ஒட்டி, நிறைவு விழாவில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விழாவில் கனிமொழி எம்.பி. பேசுகையில் "தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. புதிய கலைஞர்களின் திறமைக்கு மக்கள் அளிக்கும் கைதட்டல் அவர்களுக்குப் மிகப்பெரிய உற்சாக மருந்து. இந்த விழாவை வெற்றி பெறச் செய்த பொதுமக்கள், காவல்துறையினர், அரசுத் துறையினர் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி" என்றார்.

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "மண்ணின் கலைகள் அழிந்துவிடக் கூடாது, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனிமொழி எம்.பி.யின் நோக்கம் நிறைவேறி வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் மன மகிழ்ச்சியோடு இதில் பங்கேற்றுள்ளனர்" என்றார்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்"தூத்துக்குடியையும் கடலையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அதேபோல் நெய்தல் நிகழ்ச்சியையும் மக்களையும் பிரிக்க முடியாது. 2 வயதுக் குழந்தை முதல் 80 வயது முதியவர்கள் வரை குடும்பத்தோடு கலந்துகொண்டு மகிழ்ந்ததைக் காண முடிந்தது" என்றார்.

தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை உட்பட 20-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன், குஜராத் மாநிலத்தின் 'சித்தி கோமா' நடனமும் இடம்பெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்காக 30-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளும், நேரடி உற்பத்தியாளர்களின் சுயதொழில் பொருட்களின் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory