» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)



விவசாய பயன்பாட்டு உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன் அறிவுரையின்படி, புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மலர்விழி, வேளாண்மை அலுவலர் பிரகாஷ் ஆகியோர் புதூர் வட்டார சில்லரை உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வின் போது விவசாயிகளிடம் உரம் விற்பனை விற்பனை முனைய கருவி(பிஓஎஸ்)  இயந்திரம் வழியாக மட்டுமே விற்பனை செய்தல் வேண்டும். விவசாயிகளின் ஆதார் அட்டை சரிபார்த்து விற்பனை செய்ய வேண்டும். மானிய விலையில் விற்கப்படும் அனைத்து உரங்களுக்கும் விவசாயி முகவரி, தொலைபேசி எண், கையொப்பத்துடன் பட்டியல் வழங்க வேண்டும்.
உர மூட்டையில் உள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. 

உர இருப்பு மற்றும் விலைப்பட்டியலை முறைப்படி பராமரிக்க வேண்டும்.உரிமம் மற்றும் அனுமதி பெற்ற கிடங்குகளில் மட்டுமே உரங்கள் இருப்பு வைத்திருத்தல் வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாத கிடங்குகளில் வைக்கப்படும் உரங்களுக்கு வட்டாரத்தில் விற்பனை தடை செய்யப்படும்.

மேலும், விவசாயிகள் உரக்கடைகள் அல்லாது தெருக்களில் பிற வட்டாரங்களில்,பிற மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களால் விற்பனை செய்யப்படும் ஆர்கானிக் உரங்களை வாங்க வேண்டாம். அவற்றில் முறையான சத்துக்கள் இருப்பது கேள்விக்குறியே. அவ்வாறு உரிமம் பெறாத இடங்களில் உரங்கள் விற்பனை செய்வது உரக்கட்டுப்பாட்டு சட்டப்படி குற்றமாகும்.

விவசாயிகள் அதிக அளவில் யூரியாவை பயன்படுத்துவதை குறைத்தல் வேண்டும். மண்பரிசோதனையின்படி வழங்கப்படும் மண்வளஅட்டையில் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான தழைச்சத்தே பயிர்களுக்கு போதுமானதாகும். மேலும், அடி உரமாக காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.ஒரு ஏக்கருக்கு அதிக பட்சமாக 2 மூட்டைக்கு மேல் யூரியா பயன்படுத்த தேவையில்லை. 

மேலும், தழைச்சத்துக்கு நானோ யூரியா, நானோ டிஏபி, உயிர்உரங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்து உரங்களை பயன்படுத்தி உரச்செலவை கட்டுப்படுத்தி மண்வளத்தை மேம்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

யூரியா கடத்தல், பதுக்குதல், எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், முறையற்ற தன்மையில் பட்டியலிடுதல் போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டுச்சட்டம் 1985ன்படி, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வியாபாரிகளிடம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory