» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் 338வது மாத இலக்கிய ஆய்வரங்கம் எழில் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.
முத்தமிழ் மன்றம் அறக்கட்டளை தலைவர் நல்லாசிரியர் வரகவி மா. முருகேசன் தலைமை வகித்தார். கம்பன் கழகப் பொருளாளர் தங்கப்பாண்டி வரவேற்புரை நல்கினார். இந்நிகழ்வில் ஆசிரியப்பணி நிறைவு பெற்ற பார்வதி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கபட்டு கெளரவிக்கிப்பட்டது.
ஜெயசக்கரவர்த்தி மகேந்திரன் ஆகியோர் கவிதை படைத்தனர், சிறப்புச் சொற்பொழிவினைநட்சத்திரப்பேச்சாளர் கிருஷ்ணன் ஆற்றினார்.கவிஞர் கவிமேகம்,இலக்கியக்குரிசில் நல்லாசிரியர் இராஜாமணி நாடார் காமராஜ் பதின்ம மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரபு, கழுகுமலை திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், ஆசிரியை கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கம்பன் கழகத் தலைவர் துரைப்பாண்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.எழுத்தாளர் பொன்ராஜ் ஆசிரியர் கிருஷ்ணகுமார், ஆர்வலர் சௌந்தர பாண்டியன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கம்பன் கழகச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)








