» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தி பார்க் கிண்டர்கார்டனில் 80-வது சுதந்திர தின விழா!

ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:44:39 PM (IST)



தூத்துக்குடி சிதம்பரநகர் 1-வது தெருவில் அமைந்துள்ள 'தி பார்க் கிண்டர்கார்டன்' வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா நடைபெற்றது.

விழாவில், விஜயலட்சுமி குழும நிறுவனங்கள் மற்றும் PARC குழுமக் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஆர். அர்ச்சனா பெருமாள்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அனைவரும் இணைந்து தேசிய கீதம் பாடினர். நிகழ்ச்சியில் பேசிய அர்ச்சனா பெருமாள்சாமி, சுதந்திரத்தின் மதிப்பு, தேசப்பற்று மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

NEST Montessori இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் செல்வி இளவரசன் வரவேற்புரையாற்றினார். ஓய்வுபெற்ற மாஸ்டர் சீஃப் பெட்டி ஆபீசரும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான வில்சன் தர்மராஜ் சுதந்திர தின உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

PARC Kindergarten மற்றும் NEST Montessori மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குத் தலைமை விருந்தினர் விருதுகளை வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும், தாத்தா-பாட்டிகளும் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாக டாக்டர் பி. முத்துக்குமார் நன்றியுரை ஆற்றினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory