» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் சுதந்திர தினவிழா : போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியேற்பு

சனி 15, ஆகஸ்ட் 2026 12:29:44 PM (IST)



கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், 200-க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரி மாணவிகள்  கலந்துகொண்டு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சொர்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து சுதந்திர தின விழாவில், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்; நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன். 

போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக வழங்குவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றைத் தடுத்து, போதைப் பொருட்களைத் தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். என்று மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். 

இவ்விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டச் சாலை பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் முத்து செல்வம் மற்றும் முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா வரவேற்புரை ஆற்றினார். 

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமேஷ் குமார், தாமோதரக் கண்ணன், பிரபாகரன், நடராஜன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சென்மதி, பூபதி, மகேஸ்வரி, பாண்டீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory