» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:59:13 AM (IST)
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை.
நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், தேசிய மரியாதையைச் செலுத்தும் விதமாகவும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இயங்கும் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகப் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டுப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
துறைமுக வளாகத்திலும் படகுகளிலும் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இன்று ஒருநாள் விடுமுறைக்குப்பின், நாளை (ஆகஸ்ட் 16) வழக்கம்போல் விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லும் என மீன்பிடி துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மழைக்கு முன்பாக வி.வி.டி. ரோட்டில் சீரமைப்பு பணிகள்: வீ தி லீடர்ஸ் அமைப்பு கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:06:00 AM (IST)

சட்டப்பேரவையை ரீல்ஸ் போன்று நடத்துகிறது தவெக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:03:59 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி முகூர்த்தத் திருமணங்கள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:58:30 AM (IST)

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)








