» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு!

வெள்ளி 17, ஜூலை 2026 11:41:31 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கார்த்திக் ராஜா (23). இவர் கடந்த 13ஆம் தேதி குளத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலை விளாத்திகுளம் சாலை சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் ராஜா, உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுத் தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கார்த்திக் ராஜா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory