» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிக மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 11:27:22 AM (IST)
தட்டார்மடம் அருகே நரம்புத் தளர்ச்சி நோயால் மனவேதனையில் அதிகப்படியான மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சன்விளை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் அனுசியா (23). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டிலிருந்த இவருக்கு, கடந்த இரண்டு வருடங்களாக நரம்புத் தளர்ச்சி நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காகத் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தொடர் உடல்நலக் குறைபாடு காரணமாக மனவேதனையடைந்த அனுசியா, வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டுள்ளார். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)









