» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 18, ஜூன் 2026 8:24:06 AM (IST)
கிறித்துவ தேவாலயங்களில் பணிபரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நல வாரியத்தில் பதிவு செய்த கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அவர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.இந்த நலத்திட்ட உதவிகள் பெற கிறித்துவ இனத்தைச் சார்ந்த 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு முறையான மாதாந்திர ஊதியம் என்று இல்லாமல் உள்ள பணியாளர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி www.cwb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்: முதல்வர் விஜய்யுடன் ஹூண்டாய் அதிகாரிகள் ஆலோசனை!
வியாழன் 18, ஜூன் 2026 8:41:21 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ஜூலை 7-ல் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி!
வியாழன் 18, ஜூன் 2026 8:17:39 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை!
வியாழன் 18, ஜூன் 2026 8:13:49 AM (IST)

கிரீன் காப்பர் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சி: முதலமைச்சர் விஜய்யுடன் வைகோ திடீர் சந்திப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 8:05:01 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்குத் தடை : ஜூலை 1 முதல் அமல் - பக்தர்களுக்கு அறிவுறுத்தல்!
வியாழன் 18, ஜூன் 2026 7:47:25 AM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 17, ஜூன் 2026 8:50:57 PM (IST)









