» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)
கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசால் கல்பனா சாவ்லாவின் நினைவாக அவரது துணிச்சலான செயல்களை பாராட்டும் வகையில் பெண்களில் துணிச்சலையும் துணிச்சலான முயற்சியையும் வெளிப்படுத்தும் மற்றும் துணிச்சலான பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரத் துணிச்சலான மற்றும் சாதனை புரிந்த பெண்மணிக்கு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.5.00 லட்சம் பணப்பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் தனிநபர் (மகளிர் மட்டும்) தமிழகத்தில் பிறந்தவராகவும் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
1. ஒரு பக்கம் அந்த நபரைப் பற்றியும், துணிச்சல் மற்றும் துணிச்சலான முயற்சிகளை பற்றியும் தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் Verdana எழுத்துருவில் எழுதப்பட்டிருக்க இருக்க வேண்டும்.
2. அந்த நபரின் சுய விவரம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2
3. படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.
4. விண்ணப்பதாரின் சுயசரிதை தரவு.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, தாங்கள் செய்த துணிச்சலான செயல் குறித்த உரிய விவரங்கள், நிழற்படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விபரங்கள் போன்ற முழு விபரங்களுடன் 19.06.2026-க்குள் விண்ணப்பித்து அதன் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628 101 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)

சர்வதேச யோகா தின விழிப்புணர்வு முகாம் : இயற்கை மருத்துவம், யோகா செயல்விளக்கப் பயிற்சி!
புதன் 10, ஜூன் 2026 3:24:59 PM (IST)

ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்: ஜூன் 12ஆம் தேதி போராட்டம் - விவசாயிகள் முடிவு!
புதன் 10, ஜூன் 2026 3:20:38 PM (IST)

புகையிலைப் பொருட்களை விற்பனை: ஒருவர் கைது
புதன் 10, ஜூன் 2026 3:09:05 PM (IST)









