» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!

புதன் 6, மே 2026 5:11:48 PM (IST)

விளாத்திகுளம் அருகே, பள்ளி மாணவியைக் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன். இவரது மகன் கார்த்திக்குமார் (23). இவர், புதூர் - கம்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, கோடை விடுமுறையை முன்னிட்டு அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இதனை நோட்டமிட்ட கார்த்திக்குமார், திடீரென வீட்டிற்குள் புகுந்து மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கார்த்திக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கார்த்திக்குமாரை கைது செய்து, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory