» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்

வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொள்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், பிரதமர் மோடி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ரோடு ஷோ மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த எழுச்சி மிகு பயணத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள்" எனத் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தால் அரசியலில் புதிதாக எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் பாஜகவை மட்டுமே அதிகம் விமர்சிப்பதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு அவர் கொண்டுள்ள பயத்தையே காட்டுவதாகவும் நயினார் நாகேந்திரன் சாடினார்.

மெட்ரோ ரயில் திட்டம் குறித்துப் பேசிய அவர், தமிழக அரசு முறையான விரிவான திட்ட அறிக்கையைக் கொடுக்காததே இத்திட்டம் தாமதமாகக் காரணம் எனத் தெரிவித்தார். மேலும், சாத்தான்குளம் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு சட்டப்படியானது என்றும், அதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

பேட்டியின் போது நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் எம்.ஆர். காந்தி, மாவட்டத் தலைவர் கோபகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் உமாரதி ராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory